நான் தற்பொழுது தங்கியுள்ள விடுதியில் பிற மாநில பெண்கள் அதிகம். அவர்கள் அண்டை மாநிலத்திலிருந்து படிக்க வந்தவர்கள்.
மார்ச் திங்கள் 13 ஆம் நாள் நமது புதிய சட்டப்பேரவை திறப்பு விழா நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றதை நாமனைவரும் அறிவோம். அவ்விழாவை விடுதியில் தங்கியுள்ள மகளிர் கண்டு களிக்கும் வண்ணம் தொலைக்காட்சி முடுக்கி விடப்பட்டது. நானும் என் தோழிகள் இருவரும் தேநீர் அருந்தி கொண்டே விழாவை பெருமை பொங்க கண்டு கொண்டிருந்தோம். அவ்விழா தொடக்கத்தில் "தமிழ்த்தாய் வாழ்த்து" பாடப் பெற்றது. அதைக் கேட்டவுடன் நானும் என் தோழியும் உணர்வு பொங்க எழுந்து நின்று மரியாதை செய்தோம். இதை பார்த்த அந்த பிற மாநில பெண்டிர் கேலி செய்து கொக்கரித்தனர். அதை கவனியாமல் நானும் என் தோழியும் பாடல் முடிந்தவுடன் தான் அமர்ந்தோம்.
நாம் ஒரு இடத்திற்கு பிழைக்கவோ படிக்கவோ செல்கிறோம் என்றால் அந்த கலாசாரத்தையும் மொழியையும் மதிக்க வேண்டும் என்ற அடிப்படை நாகரீகம் கூட இல்லை அப்பெண்களிடம் ... நம் வசம் இருக்கும் கல்விக்கூடங்கள் அளிக்கும் கல்வி மட்டும் வேண்டுமாம் ... நம் மொழி கேலிக்குரியதாம்... என்ன ஒரு இறுமாப்பு...
அவர்களின் மொழியே தமிழிலிருந்து பிறந்தது தான். இதை அறியாத அவர்களின் அறியாமையை நினைத்து சிரிப்பு தான் வருகிறது. என்ன முட்டாள்த்தனம்... "தமிழை கேலி செய்து தங்கள் மொழியையும் அவமானப் படுத்திக்கொள்கிறோம்" என்பதைக் கூட அறியாத அவர்களை என்ன செய்யலாம்???
அந்த மொழிக்கு மொழி வாழ்த்தும் கிடையாது... நம் மொழி போன்று பண்டைய பெருமையும் கிடையாது. இதே நாங்கள் தேசிய கீதத்திற்கு எழுந்திருந்தால் அவர்கள் அப்படி செய்திருப்பார்களா?
இதை கண்ட பொழுது எனக்கு ஒரு பழைய திரைப்படப் பாடல் வரி தான் நினைவுக்கு வருகிறது...
"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை"....
அந்த முட்டாள் பிறவிகளுக்கு கடவுள் சிறிதேனும் அறிவை அருள வழிபாடு செய்வீர்களா தோழிகளே, தோழர்களே???
No comments:
Post a Comment