Showing posts with label நகரம். Show all posts
Showing posts with label நகரம். Show all posts

Wednesday, July 7, 2010

நகர அனுபவங்கள்

*அரசியல் கட்சிகளின் புதிய வழிமறிப்பு உத்தி -
நடைபாதையில் ஆளுயர பதாகைகள்.
அனைத்துக் கட்சிகளும் "பாதை மறிப்பு" கழகங்களாய்.

*சாலைகள் கழுவும் சேவைத் தொழிலாளர்கள் -
மாநகராட்சி குடிநீர் ஊர்திகள்.

*காவல்காரர் உறங்க -
அவர் வேலை நாயிடத்தில்.

*நிறைய குப்பை
ஆங்காங்கே மணல் -
கடற்கரை.

*நகர முடியாமல் நகர்ந்து
முனகியபடியோடி
பிரசவித்துப் பெருமூச்சுவிடும்
நிரந்தர கர்ப்பிணிகள் -
மாநகரப் பேருந்துகள்.

Pages