Showing posts with label சிறுமி. Show all posts
Showing posts with label சிறுமி. Show all posts

Friday, April 9, 2010

கவிதையா என்ன???

மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த பொழுது தோன்றிய  சிந்தனைகள் இவை... இவற்றை "கவிதைகள் " என்று பெயரிட்டு கவிதைகளை சிறுமை படுத்த விரும்பவில்லை:-D
அவை, தங்கள் பார்வைக்கு...

*தானே முன்வந்து குடிநீரை மந்திரித்துக் கொடுத்த "uncle"...
சிறு வயதில் நான் தாடியை பிடித்து இழுத்தாலும், சிரித்து கொஞ்சும்
"பாய் தாத்தா"வை ஏன் நினைவு படுத்தினார் என தெரியவில்லை...


*மருத்துவமனை வாசம் முடிந்தது...
"எப்ப கண்ணு காலேஜ் போற?" - இது தந்தை...
"உடம்ப நல்ல தேத்திட்டு காலேஜ் பத்தி யோசி டி" - இதுதான் தாய்...


*நெற்றியில் சாய் பாபா திருநீர்...
புட்டியில் சாயுபு மந்திரித்த குடிநீர்...
தெய்வத்திற்கு  தான் எவ்வளவு பரிவு?



* 22 வயதானாலும்,
முதுகலை படித்தாலும்,
சென்னையில் வசித்தாலும்,
வாகனங்கள் அற்ற சாலையை கடக்கக் கூட ஓடும் போது தெரிந்தது...
எனக்குள் இன்னும் இருப்பது கிராமத்து சிறுமி தானென்று...


*விழிகள் மட்டுமே தீண்டிக் கொள்ளும்
கிராமத்து காதல்களைக் கண்டவளுக்கு,
பொது இடங்களில் கூட அணைத்தவாறே செல்லும்
சென்னைக் காதல்,
அந்நியம்தான்...

Pages