Showing posts with label உளறல். Show all posts
Showing posts with label உளறல். Show all posts

Sunday, April 4, 2021

முதிர்வு


தலையின் நரையும்

தோலின் திரையும்

முதுகின் மூப்பும்

மானுட வாழ்வின்

நிறைக்குக் குறிகைகள்.


எளியோரின் எளிமையும்

வலியோரின் வலிமையும்

கானலேயெனக் காட்டும்

மூப்பும் இறப்பும்

இயற்கை வைத்த அறுதிகள்.


முதிர்ந்த கனியின் விதைக்குள்ளும்

உறங்குகின்றன பல கனிகள்.

இறக்கும் மனிதர் வாழ்வேதான்

அவர் அடுத்த தலைமுறைக்கு

இடும் கொடைகள்.

Thursday, September 23, 2010

முடியாத் தேடல்

அம்மாவுக்கு செல்ல மகள்...
அப்பாவுக்கு வாயாடிக் கழுத ...
தம்பிகளுக்கு ஏமாந்தாங்குளி...
தோழிகளுக்கு சண்டைக்காரி...
(சில)ஆசிரியர்களுக்கு தூங்குமூஞ்சி...
உடன் படிப்பவர்களுக்கு ஆர்வக்கோளாறு...
ஆனால்
23 வருடங்கள் தேடியும்
கண்டுகொள்ளவில்லை நான்...
எனக்குள் இருக்கும் என்னை...

Pages