This is a fast piece written today. Can be labelled philosophical or spiritual.
Though these sort of ideas in me lack depth, i found it very meaningful to pen this down. May seem half baked to a spiritually great person. But still coming up with verses like these is my new found joy.
Hope it is relatable and evokes deep thoughts.
உடலென்னும் பாத்திரத்தில்
உலகுக்குள் நுழைகிறோம்
உடலன்று நான் என்ற
உண்மையை மறக்கிறோம்
பாத்திரத்தால் வந்த கதையில்
பல பாத்திரம் ஏற்கிறோம்
வரும் போகும் பாத்திரங்கள்
சொந்தமாக நினைக்கிறோம்
வந்த போதும் போகும் போதும்
கர்மமன்றி கையில் ஏதுமன்று
இடைப்பட்ட காலத்தில்
மேலும் கர்மம் சேர்க்கிறோம்
ஆணென்றும் பெண்னென்றும்
அரசனென்றும் ஆண்டியென்றும்
தமதென்றும் பிறரதென்றும்
மாயையிலே கிடக்கிறோம்
கதை முடிந்த பின்னே
கையிலேதும் நில்லாத போது
பொருளாசை பொறாமை
போட்டிகள் தான் ஏனோ
கதை முடியும் வரையிலே
கருணை அன்பு காட்டியே
கதை மாந்தர் மகிழவே
கதை வளர்ப்போம் இனிமையாய்.
சொற்ச் சுவை, பொருட் சுவை நிறைந்த ஒரு நல்ல படைப்பு. ஆசிரியருக்கு பாராட்டுகள். வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி கவிஞரே ☺️
Deletesooper Suriyah.. eye opening thoughts..
ReplyDeleteThanks Alags :-)
DeleteThanks karthik :-)
ReplyDelete