Wednesday, May 23, 2018

A simple ode

Atheists or Non believers - this is a post about Shirdi Sai Baba. So please read this if only you want to. Let us not start any altercation on this. 

Sai Baba
Image Source : https://upload.wikimedia.org/wikipedia/commons/d/df/Shirdi_Sai_Baba_3.jpg

This has been in my bucket list for years - to write verses in adoration of Shirdi Sai Baba whom i have been worshipping from my M.E days. But Baba has blessed me with this opportunity only now. Though a believer, I was not a very staunch worshipper of any form of God for that matter till then. This connect - it just happened all of a sudden.  One can feel his invisible grip on every walk of life once the surrender to him is complete.

I have referred the book "Sai Sathcharithra" for coming up with these verses. 
Hope you enjoy it. 

ஞானத் திருவுருவே மோனப் பெருங்கடலே
கானம் பாடிக் களித்து உன்னை
தியானம் செய்யும் வரமருள்வாய்
ஞாலத்தில் சுழன்றுழலும் எம்மை
ஞானத்திலே கரைத்திடுவாய்

பரப்பிரம்மம் உருவெடுத்து பாபா என்றானதோ
பல பாவம் தீர்த்தெம்மை பக்தியிலே கரைத்ததோ
பக்தி ஞானம் நாம் உணர லீலை பல புரிந்ததோ
பருவ மேகமாய் நம் மேல் அமுத மழை பொழிந்ததோ

பாபா தரிசனம் பாப விமோசனம்
அவர் நாமம் நல்கிடும் விவேகம் வைராக்யம்
எண்ணங்கள் மேன்மையாய் பக்தியில் திளைத்திடும்
காணுமிடமெல்லாம் அவர் திருவுருவம் காத்திடும் 

கண்காணா எண்ணங்கள் கண்டுகொள்ளும் கடவுள் நீ
முக்காலம் வடித்தெடுக்கும் மும்மூர்த்தி வடிவம் நீ
பல்லுயிருள் பரம்பொருளை கண்டுணர்ந்த யோகி நீ
எக்காலமும் எவ்விடமும் வாழும் சர்வவியாபி நீ

பிறப்பில்லா இறப்பில்லா பெருஞ்ஜோதியே
உமையன்றி எமக்கேது பிறிதோக் கதியே
உன் பாதம் தான் பற்ற தீரும் வினையே

அகக்கண்கள் திறப்பித்து ஞானம் தருவாய்
அஹங்காரம் அழிவித்து அறிவும் அருள்வாய்
புலனுணர்வு பொருளாசை பொசுங்கிட செய்வாய்

பாபா உம் லீலைக்கு கணக்கும் உண்டோ
உம் கருணை பார்வைக்கிணை சொற்கள் உண்டோ
உம் நாமம் விடவும் ஒரு சாதகம் உண்டோ

No comments:

Post a Comment

Pages