These are verses every parent, mother in particular can related to. Thanks for reading :-)
உடலுள் ஒரு பாகமாய்
எனக்குள் வளர்ந்து - என்
உயிரின் நுண்ணுருவாய்
எந்தன் கைசேர்ந்தாய்
வயிற்றுள் புழுபோல்
வளைந்து நெளிந்தது
விந்தையாய் இன்று
வேலை பல செய்யுது
கோபத்தின் உச்சியில் நான்
மதியிழக்கும் நொடிக்கடுத்தே
கொஞ்சியெனை குளிர்விக்கும்
மாயம் நீயே அறிவாய்
ஆத்திகரின் வேண்டுதல்
அன்னை தந்தை ஆவதே
நாத்திகரும் கடவுள் காண்பர்
குழவி துயில் அழகிலே
உன் சிரிப்பு அழுகை வலி
பன்மடங்காய் நானுணர
உன் உணர்ச்சிமிகை காட்டும்
கண்ணாடியாய் சுயம் தொலைத்தேன்
Translation:
Having grown as a part of myself, you reached me as a miniature of my soul.
That which wriggled inside my tummy is surprising me with many actions.
After getting me insane with anger, you trick to cool me down with cuddles.
Theists wish to become parents. Even atheists feel God in a sleeping baby.
I feel your laughter, crying and pain manifold. I have lost myself being a mirror showing your feelings in amplification.