Wednesday, December 29, 2010

கடல் கடந்து...

மூச்சடைக்க அடைக்க
என்னறைக் காற்றில்
தனிமை...

கல்லாய் கனத்துப்போய்
கரைய மறுக்கும்
வினாடிகள்...

எப்போதும் முகம்நோக்கி
விழித்திருந்து வெறுப்பேற்றும்
கணிப்பொறி...

நட்ட செடியின் மலரும்
நாலு வயது மகனும்
மேசையில் பின்னணி...

கண்ணீரையும்
கண்ணீர் துடைப்புகளையும்
கடத்தா தொலைபேசி...

உறவினர் பேராசையுடன் நெருங்க,
மனைவி பெருமைபொங்க சிரிக்க,
விடுமுறையில்
என்னை
"மாமா" என்றழைத்தான் மகன்
"அப்பா" தொலைபேசியில் தான் பேசுவாராம்.

3 comments:

  1. Cool words, kadaisi varigal konjam en moolaikku vilangu marukkirathu.. vilakkam please if you can :-)

    ReplyDelete
  2. @baskar lingam: உறவினரும், மனைவியும் தன்னால், தன் பொருளால் மகிழ்ச்சியாக இருந்தாலும், தன் மகனிடம் தனக்கு கிடைக்க வேண்டிய அன்பு கிடைக்காத நாயகன் வெறுமையை உணர்வது தான் கடைசி வரிகளுக்கு பொருள் சகோதரரே :)

    ReplyDelete
  3. @ Suriyah : innum puriyavillai sagothariyae :-) it is better we take this offline..

    ReplyDelete

Pages