Thursday, September 30, 2010

பின்னோக்கி ஒருநாள்

Dear comrades of ChancyCSE... 
A great opportunity to rewind our lives.
Reviving the unity and togetherness of the four happiest years on October 9th!!
Expecting you all @ Periyar Maniammai University on that great day!!!

நாலு வருடங்கள்...
ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருந்த நம் வாழ்க்கைகள்
பொறுப்புகள் ஏதுமின்றி நம் எண்ணங்கள் 
பெயர்கள் தாங்கி அழகான மேஜைகள்
பல கைகளுக்கு இடமளித்த உணவுப் பொட்டலங்கள்
வகுப்பு நடக்க விழிகள் செய்த வெளிநடப்புகள்
பாடாத வாய் பாட, ஆடாத கால் ஆட, வெளியூர்ப் பயணங்கள்
தோழமையின் முழுப் பொருள் சொன்ன கண்ணீர்த்துளிகள்
வேற்றுமையில் ஒற்றுமை கண்ட உழைப்புகள்
மூன்று முறை விட்டுக்கொடுக்கா கோப்பை 
தொலைத்த தூக்கங்களால் கல்லூரி விழாக்கள் 
சிக்கி முக்கி நெருப்பாய் பூசல்கள்
தூற்றியவர்களையும் போற்றவைத்த நம் திறமைகள் 
பொறுப்புகள் ஏதுமின்றி நம் உள்ளங்கள்  
நம்மில் ஒருவராயிருந்து அரணான கவிதைமகள் 
தேர்வின் போது மட்டுமே நம் ஸ்பரிசம் பெற்ற புத்தகங்கள் 

காலத்தின் ஓட்டத்தில்... 
மென்பொருள் வல்லுனராய் சிலர் 
பொறியியல் ஆசிரியராய் சிலர் 
காதல் மனைவியாய் சிலர் 
இன்னும் மாணவியாய் பலர். 

காலச் சக்கரம் பின்னோக்கி சுழலாதா?
தொலைத்த நாலு வருடங்களில் 
மீளாதா???
ஒரு நாளேனும்...

அதே பழைய 
குறும்புக்காரியாய்
சண்டைக்காரியாய்
பொறுப்பில்லா ஜென்மமாய் 
வாயாடியாய் 
கோபக்காரியாய் 
மாற மாட்டோமா???
ஒரு நாளேனும்... 

மீட்டெடுக்கின்றனர்
கடவுளும் 
கவிதை மகளும்
அந்நாட்களில் ஒன்றை...

நம் வருகை
அவர் மீட்புக்கும் 
அவர் மீட்பு 
நம் வருகைக்கும் 
அழகூட்டட்டும்...

வருமோ...
இன்னுமோர் மீட்பு ???
யானறியேன்...

--

1 comment:

Pages