நான் இறுதி ஆண்டு படிக்கும் பொழுது எங்கள் கல்லூரியில் பல்வேறு மன்றங்கள் தொடங்கப்பட்டன... ஒரு சில விழாக்களில் அழுத்தமான தமிழில் பேசியதனால் தமிழ் மன்றத்திற்கு நான் தலைவியாக தேர்ந்தேடுக்கபட்டேன்...
மன்றத்திற்கு பெயர் வைப்பது தொடங்கி பதாகை வடிவமைப்பது வரை ஆர்வமாக நிறைய வேலைகள் செய்தோம்... நிறைய போட்டிகள் நடத்தினோம்.. பல திட்டங்கள் தீட்டினோம்.. ஆனால் கல்லூரிக்குள் நடந்த உள் அரசியல் காரணமாக ஒரு விழா கூட நடத்த முடியவில்லை...
இந்த பதாகையை வடிவமைத்த எனது தோழிகள் பாக்கியலட்சுமி, அழகுசெல்வி, சத்யா ஆவர். பதாகையை கல்லூரி முடிவதற்குள் அச்சேற்றி விட என்னால் முடிந்த அளவு முயன்று பார்த்தேன்... முடியவில்லை... இரண்டு மாதங்களுக்கு முன்னர் கூகிள் உரையாடலில் பாக்கியலட்சுமியை சந்திதேன். பதாகை வடிவத்தை எனது வலைப்பூவில் போட சொன்னது அவர்தான்..
இந்த தமிழ் மன்றம் எனக்கு கற்று கொடுத்த பாடம் - "ஒரு வேலையில் ஈடுபடுவதற்கு முன்னர் அது எந்த அளவு சாத்தியப்படும் என்று தெரிந்து கொண்ட பிறகே அதில் ஈடுபட வேண்டும்"...
இந்த மன்றத்திற்காக எனக்கு உதவிய என் இனிய தோழிகளுக்கும், அழகான ஆழமான ஒரு நல்ல பெயரை வைக்க பரிந்துரை செய்த அய்யா திரு.முத்துவளவன் அவர்களுக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்.
பாவாணரைப் போன்று தமிழ் உணர்வு படைத்தவர்களை இன்று தமிழுலகில் காண்பது அரிது.பலர் தமிழ் பேசவும் தமிழன் என்று அறியப் படுவதிலும் வெட்கப்படுகின்றனர்.தமிழ் சமஸ்கிருதத்தை விட தூயதும் தெய்வீகமானது என்பதை சான்றுகளால் நிறுவிய தமிழ்மகன் அவர். தமிழை உயிரென மூச்சென கருதி தமிழ் தொண்டாற்றியவர் அவர். தன் மானம் படைத்த தமிழன் எவனும் அவரை மறக்கமாட்டான்!அம்மேன்மை பொருந்திய கவிக்கு என் இனிய தமிழ் வணக்கம்!
ReplyDelete