நீர்க்கிண்ணம் தானியச்சிதறல்
கம்பியூஞ்சல் எச்சமணம்
கைதியின் உலகம் சுருங்கியடங்கியது
கூண்டின் அழுக்குக்கம்பிகளுள்
தன்போல் கீச்சும்
சக கைதியே உறவு
மனிதக்கை வீசும
பழந்தானியமே உணவு
வாழ்க்கைத் தேவைகள்
தேடலின்றிக் கைசேர
தன்விருப்பம் அறியா
அறியாமை வாழ்க்கை
இரும்புக் கம்பிகளுள்
பறவைச் சிறை
இல்லாக் கூண்டுகளுள்
மனிதச் சிந்தை
வானளக்கவே சிறகு
இடம்பெயரவே உலகு
கூண்டுவெளி வாழ்க்கை
பல்வண்ணப் பேரழகு
ஜனவரி'22 காட்டுமஞ்சரி இதழில் வெளியானது.
No comments:
Post a Comment