Sunday, July 14, 2024

உப்பு காரம்

பட்டாம்பூச்சிச் சிறகில்
பரவசம் காண்கிறார்

குடும்பச் சிக்கல் சாக்கில்

குதுகலமாய் அழுகிறார்


கற்பனையிலும் காதலிலும்

கனவுலகில் மிதக்கிறார்


செய்தித்தாள் வாசித்து

நாட்டுநிலைமை புலம்புகிறார்


பகுத்தறிவே அறிவென்று

பலருக்கும் உரைக்கிறார்


படையலிட்டுப் பூசைசெய்து

பக்தியில் கரைகிறார்


பிறர்குறை சுட்டித்

தன்னை மெச்சுகிறார்


அனைவர் வாழ்விலும்

ஆட்சி செய்ய விழைகிறார்


ஒரே ஒருவர்

பலவிடங்களில் பலவிதமாய் !


சப்பென்ற உணவிற்கு 

உப்பிட்டு ருசியேற்றுதல் போல


வாழ்வின் உள்ளோடும் வெறுமை மறக்க
வித்தைக்குரங்காய் குதிக்குது மனம்.


காட்டு மஞ்சரி, ஜூலை'24 

2 comments:

Pages