"தோட்டத்தில் பிடித்த பட்டாம்பூச்சிகள்,
தோழர்களுடன் உடைத்த பம்பரங்கள்,
திருட்டுத்தனமாய்க் கண்ட திரைப்படங்கள்,
திரும்பிப் பார்த்த கன்னியர்கள், ..."
என வளர்ந்த என்
எழுபது வயது தாத்தாவின்
கதைகளில் இல்லாத
"மதிப்பெண்கள்,
கூட பயில்பவரின் பொறாமைகள்,
பாட்டு, நடன போட்டா போட்டிகள்,
நேர்முக தேர்வுகள்"
கூறின
இலக்கற்ற தேடல்களில்
நான் தொலைத்துக் கொண்டிருக்கும்
கணக்கற்ற இன்பங்களின்
எண்ணிக்கை...