புதிதாய்ப் பிறந்த போது
தாயின் அரவணைப்பாய்த் தொடங்கி...
தெருவோர விளையாட்டுகளாய்
மூலைக்கடை குச்சி மிட்டாயாய்
தீபாவளி பட்டாசுகளாய்
வாங்கா அடிகளாய்
நண்பரின் அருகாமையாய்
கல்லூரி இளமைக் குறும்புகளாய்...
மாறி மாறி...
தற்போது,
ஜன்னலோர பண்பலைப் பயணமாய்
மகிழ்ச்சி...
தேவைகள் மாற
மகிழ்ச்சியும் முகமூடி மாட்டியது...
தேவைகள் இல்லாத தேவை
தீர்ந்தால் கிட்டுமோ...
நிரந்தர மகிழ்ச்சி???
No comments:
Post a Comment