Monday, June 20, 2022

புகைப்படம்

Image source: https://unsplash.com/photos/peQ0YeKTfaA


காலமெனும் ஓவியரிடம் 
களவாடிய சிற்றோவியம்.

மனவறை இருள்மூலையில்

ஒளிபாய்ச்சும் கைவிளக்கு.


நிதந்தேயும் நினைவுகளை

நிரந்தரஞ்செய்ய சிறுமுயற்சி.

நிகழ்காலக் குழப்பமிடை

நிதானந்தரும் சிறுகூரை.


மனவிடுக்கில் துயில்புரியும்

கலவையான உணர்வுகளைக்

கண்கள்வழி கட்டவிழ்க்கும் 

காலக்கள்ளனின் மாயச்சாவி


கூச்சலுறும் பெரும்பயணத்தில்

சிறுதுநேரம் இனிமைபூசும்

அழகான அணிச்சல்துண்டே

புகைப்படமெனும் காலயந்திரம்.


ஏப்ரல்'22 "காட்டு மஞ்சரி" மின்னிதழில் வெளியானது.


Pages